10 கோடி நிதி: உள்நோயாளிகள் பிரிவை ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர்!!!

10 கோடி நிதி: உள்நோயாளிகள் பிரிவை ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர்!!!

கரூரில் 10 கோடி நிதியில் நூறாண்டு பழமை வாய்ந்த பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகள் பிரிவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூரில் கடந்த ஆட்சி காலத்தில் காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது. இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. 

தனியாரைவிட கரூர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக அறுவை சிகிச்சைகள்- டீன்  தகவல் | KARUR NEWS : BEST TREATMENT AT A GOVERNMENT HOSPITAL

மீண்டும் பழைய அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும்  பயன்பாட்டுக்கு வரும் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து இருந்தார். பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நூறாண்டு பழமை வாய்ந்த கரூர் பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகள் பிரிவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். 

Electricity Minister Senthil Balaji will consult tomorrow | மின்சாரத்துறை  அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை ஆலோசனை

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நன்நாளில் மீண்டும் இந்த மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவுடன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | நாளை வெளியாகிறது பிளஸ் 12 தேர்வு முடிவுகள்

படிப்படியாக இந்த வளாகத்தில் மற்ற பிரிவுகள் விரைவில் கொண்டுவரப்படும். இதற்கு 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், குளித்தலையில் உள்ள மருத்துவமனை இணை மாவட்ட தலைமை மருத்துவமனை அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு அதற்காக 40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றா