வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 10 சிலைகள் மீட்டு தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!!

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 10 சிலைகளை மீட்டுள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், அதனை தமிழக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 10 சிலைகள் மீட்டு தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!!

வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 10 சிலைகளை தமிழக அரசு அதிகாரிகளிடம் மத்திய கலாச்சாரத்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

அதன்படி 1994ம் ஆண்டு நெல்லை முண்டீஸ்வர முடையார் கோவிலில் இருந்து திருடு போன துவரபாலா கல் சிற்பம், கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதேபோல், தஞ்சை புன்னைநல்லூர் கிராமத்தில் இருந்து திருடப்பட்ட நடராஜர் சிற்பமும் அம்பாசமுத்திரம், ஆழ்வார் குறிச்சி கிராமத்தில் இருந்து திருடு போன கண்கல மூர்த்தியின் சிலை ஆகியனவும் கடந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஆம்பசமுத்திரம் தாலுகாவில் உள்ள நரசிங்கநாதர் கோவிலில் இருந்து திருடப்பட்ட11 நூற்றாண்டை சேர்ந்த நந்திகேஷ்வரர் சிலையும், 12ம் நூற்றாண்டு சோழர் காலத்தை சேர்ந்த நான்கு கைகள் கொண்ட விஷ்ணு சிலையும் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதேபோல் அரியலூர் கோவில் உள்ள பார்வதி தேவி சிலை, பாபநாசத்தின்  வான்மிகநாதர் கோவிலுக்கு சொந்தமான சிவன் பார்வதி சிலைகளும் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் சீர்காழி கோவிலில் நிறுவப்பட்டிருந்த, குழந்தை சம்பந்தரின் சிலை கடந்த 2005 ஆண்டுக்கு முன்பு திருடுப்போன நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து  மீட்கப்பட்டுள்ளது.