சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 நிர்வாகிகள் நீக்கம்... எடப்பாடி - பன்னீர் அதிரடி!!

சசிகலாவுடன் தொலைப்பேசியில் பேசிய 15 பேரை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளனர்.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 நிர்வாகிகள் நீக்கம்... எடப்பாடி - பன்னீர் அதிரடி!!

அதிமுகவில் தற்போது சசிகலா - எடப்பாடி பழனிச்சாமி- ஓ. பன்னீர்செல்வம் இடையே கடுமையான கோஷ்டி மோதல் நிலவி வந்த நிலையில்,  சசிகலாவோ கட்சியை விரைவில் மீட்பேன், தொண்டர்கள் பக்கம் நிற்பேன், எல்லாம் என்னுடைய கட்டுப்பாட்டிற்கு வரும் என்று சசிகலா தொடர்ந்து ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சசிகலாவை நேரடியாக எதிர்த்து வரும் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா எல்லாம் கட்சி உறுப்பினரே இல்லை. அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாக சவால் விட்டு வருகிறார்.  இது ஒருபுறமிருக்க  ஓபிஎஸ் யாருக்கு ஆதரவாக இருக்க போகிறார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்து வந்த நிலையில், தான் இன்று நடந்த அதிமுக கட்சி கூட்டத்தில் ஓபிஎஸ் எதிர்கட்சித் துணை தலைவராக ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. அதாவது எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சிக்கு எதிராக செயல்பட்டோரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக லட்சியத்துக்கு விரோதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து அறிக்கை வெளியிட்டனர்.

இதனையடுத்து சசிகலாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. வி.கே.சின்னசாமி  தேனி மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் அழகர்சாமி உள்ளிட்ட 15 பேரை கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.