16 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்தி கொள்ளவில்லை... தாமதம் ஏன்?

  தமிழகத்தில்  9% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், 16 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்தி கொள்ளவில்லை.

16 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்தி கொள்ளவில்லை... தாமதம் ஏன்?

தமிழகத்தில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரொனா தடுப்பூசி போட தொடங்கியது, இந்த நிலையில் ஜனவரி 16யில் இருந்து ஜூலை 10ம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திய கொண்டவர்களில் 16 லட்சத்து 12 ஆயிரத்து 623 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை. இதில் 28 நாட்களுக்கும் மேலாக கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் 5,64,048 பேரும் அதேபோல, 84 நாட்களுக்கும் மேலாக கோவிஷீல்டு இரண்டாவது தவணை 10,48,575 பேரும்  செலுத்திக் கொள்ளவில்லை.

இதில் அதிகபட்சமாக சென்னையில் சுமார் 3 லட்சம் பேரும் அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் பேரும் இரண்டாவது தவணை தவறவிட்டுள்ளனர். சென்னையில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 502 பேர் கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளவில்லை. அதே போன்று ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 19 பேர் கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் சென்னையில் செலுத்திக் கொள்ள வில்லை.

எனவே சென்னையில் மொத்தம்இரண்டு லட்சத்து 97 ஆயிரத்து 521 பேர் குரானா இரண்டாவது தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில்  45 ஆயிரத்து 759 பேர் கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளவில்லை. அதேபோன்று 86 ஆயிரத்து 35 பேர் கோவிஷீல்டு இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள வில்லை   எனவே மொத்தம் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 794 பேர் தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளவில்லை.

திருச்சியில் 14661 பேர் கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளவில்லை. 40,625 பேர் கோவிஷீல்டு இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளவில்லை, மொத்தம் திருச்சியில் 55826பேர் இராண்டாவது தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 6.6 கோடி பேரில் 2.15 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 53.5 லட்சம் பேர் அதாவது 9% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 16 லட்சம் பேர் உள்ளனர்.