36 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் தேர் திருவிழா!!!

சங்கராபுரம் அருகே 36 ஆண்டுகளுக்கு பிறகு பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் தேர் திருவிழா நடைபெற்றது.

36 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் தேர் திருவிழா!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவ பாண்டலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர் திருவிழா கடந்த 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 6 தேதி அன்று உள்காப்பும்,மற்றும் வெளிகாப்பும்,பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.மணிமுத்தா நதி அணைக்கட்டில் இருந்து  சக்தி அழைத்தல், சூரிய பிரபை, சந்திர பிரபை, மயில் வாகனத்தில் அம்மன் வீதி உலா, அய்யனார், துர்க்கை அம்மனுக்கு ஊரணி பொங்கல், எல்லைச்சட்டி உடைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க | பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர்!!!

தேர் திருவிழாவை முன்னிட்டு அ.பாண்டலம்,தேவபாண்டலம், கிடங்கன்பாண்டலம், ராஜபாண்டலம் ஆகிய ஊர் மக்கள் 6- தேதிமுதல் 15 வரை ஊர் சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து, தேர் திருவிழா முன்னிட்டு இந்து, முஸ்லிம்கள் உள்பட  வெளியில் சென்று விடுவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் மேலும் துர்க்கை அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர்,பன்னீர்,சந்தனம்,தேன் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டனயாக வேள்விகளும் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் துர்கை அம்மன் எழுந்தருளினார். அப்போது விழா குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் படிக்க | கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க திருக்கோவில்களின் கும்பாபிஷேக திருப்பணி துவக்க பூஜை விழா..!

தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் துர்க்கை அம்மன் ஆலயம் வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.