60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன...

60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் 12 பாா்சல்களில் ஹைதராபாத்திலிருந்து விமானத்தில் சென்னை வந்துள்ளன.

60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளை கட்டயமாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதற்கு வசதியாக ஞாயிறு தோறும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களையும் தமிழக அரசு நடத்துகிறது. இதனால் மக்கள் மிகுந்த ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்கின்றனா்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 3 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. அதற்கு தேவையான கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசிகள் குறைவாகவே வருகின்றன. ஏற்கனவே முதல் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி  போட்டுள்ளவா்களுக்கு இரண்டாம் டோஸ் போட  கோவாக்சின் தடுப்பூசிகள் தேவைப்பட்டது. 

இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை நேற்று முன்தினம், தமிழகத்திற்கு 75 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை ஹைதராபாத்திலிருந்து அனுப்பி வைத்தது. நேற்று மேலும் 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் 12 பாா்சல்களில் ஹைதராபாத்திலிருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை விமானநிலையம் வந்தது. விமானநிலைய அதிகாரிகள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் தடுப்பூசி பாா்சல்களை ஒப்படைத்தனா்.