7 கோடி ரூபாய் மோசடி- நகை கடை உரிமையாளர் தலைமறைவு...

கன்னியாகுமரி அருகே 7 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பிரபல தங்க நகைக்கடை உரிமையாளரின் மகனை கைது செய்த போலீசார், தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை தேடி வருகின்றனர். 

7 கோடி ரூபாய் மோசடி-  நகை கடை உரிமையாளர் தலைமறைவு...

நாகர்கோவில் அடுத்த ஹென்றி தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் நகை கடை நடத்தி வருகிறார். இதற்கிடையில் இவரது கடைக்கு தேவையான நகைகளை நாகர்கோவில் மேல ரத வீதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களாகவே தொழிலில் நஷ்டமடைந்து வந்த அருள்ராஜ் பணகஷ்டம் காரணமாக ஜெயபிரகாஷ்க்கு பல கோடி ரூபாய் பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று அருள்ராஜின் மகனான அரவிந்த் ஆசிர் என்பவரும் ஜெயபிரகாஷிடம் 48 லட்சம் ரூபாய் வீதம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயபிரகாஷிற்கும் அருள்ராஜிற்கும் இடையே அடிக்கடி பணம் கொடுக்கல் வாங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது அருள்ராஜின் மகளான பெனிலா, தந்தை  வாங்கிய பணத்திற்கு தான் பொறுப்பேற்பதாக ஜெயபிரகாஷிடம் கூறியுள்ளார்.

ஆனால் ஜெயபிரகாஷுக்கு வரவேண்டிய 7 கோடி ரூபாய் வராததால் அவர் நாகர்கோவிலில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்ட போலீசார், அருள்ராஜின் மகன் அரவிந்த் ஆசிரை கைது செய்தனர்.  மேலும் தலைமறைவாகிய தந்தை மற்றும் மகளை தேடி வருகின்றனர்.

 .