மர்ம காய்ச்சலுக்கு 8 மாத குழந்தை பலி...!

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மர்ம காய்ச்சலுக்கு 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் (46) தாண்டாம்பாளையத்தில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கௌரி (34) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதில் இதில் 8 மாத மகளுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உடல் நலம் குறைவு (காய்ச்சல்) ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.  

 தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மர்ம காய்ச்சலுக்கு எட்டு மாத பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க   | "அந்த இத்து போன பாரத்தில் எனக்கு உடன்பாடில்லை" எம்பி அப்துல்லா!!