கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளே இல்லாத 9 மாவட்டங்கள்…  

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத இடங்களாக மாறியுள்ளது  

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளே இல்லாத 9 மாவட்டங்கள்…   

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத இடங்களாக மாறியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ள நிலையில், ராமநாதபுரம், பெரம்பலூர், விழுப்புரம், கரூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத இடங்களாக மாறியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 441 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகவும், அதிகபட்சமாக  சென்னையில் 108 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், குறைந்தபட்சமாக அரியலூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டத்தில் 1 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.