குப்பையில் வீசப்பட்ட ரூ.90 ஆயிரம் - உரியவரிடம் ஒப்படைப்பு

சென்னை அருகே குப்பையில் வீசப்பட்ட 90 ஆயிரம் ரூபாய் பணம்  காவல்துறையின் உதவியுடன்  மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குப்பையில் வீசப்பட்ட  ரூ.90 ஆயிரம் - உரியவரிடம் ஒப்படைப்பு

சென்னை அடுத்த மணலி அருகே உள்ள புதுநகர் ஆண்டாள் குப்பதை  சேர்ந்தவர் பாபு. இவருடைய தாய் சந்தபி வயது60. இவர் டெல்லிக்கு செல்வதற்காக  நேற்று இரவு ஆண்டார் குப்பத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே இறங்கியுள்ளார். பின்னர் இரவு சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்பட இருந்த அவர், தான் கொண்டு வந்த பொருட்களை சரிபார்த்துள்ளார்.

அதில் தலையணை காணாமல்போனது தெரிய வந்தது. தலையணைக்குள் 90 ரூபாய் வைத்து எடுத்து வந்தது அவர் நினைவுக்கு வரவே உடனே அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து மகன் பாபுவிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து மணலி, புதுநகர் மற்றும் எண்ணூர் ஆகிய மூன்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து  பாபுவின் தாய் சந்தபி வந்த ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று விசாரித்தனர். அவர் அந்த தலையனையை குப்பை என நினைத்து ஆண்டார் குப்பம் அருகே இருந்த குப்பையில் தூக்கி வீசியதாக  தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் தலையணையை எடுத்து, அதிலிருந்த பணத்தை கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைத்தனர்.