கீழடியில்  9-ம் கட்ட அகழாய்வு....தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்...!!

கீழடியில்  9-ம் கட்ட அகழாய்வு....தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்...!!

கீழடியில் இன்று முதல் 9-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதலமைச்சா்  மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணி 2015-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதுவரை 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.  இதனை மத்திய தொல்லியல் துறை 3 முறையும் தமிழக தொல்லியல் துறை 5 முறையும் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன. 

அகழாய்வு மூலம் கிடைத்த பல ஆயிரம் தொல்பொருட்களைப் மக்கள் பார்வையிடும் வகையில் 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பில் கீழடி அகழ் வைப்பகம் கட்டப்பட்டு மார்ச் 5-ல் முதலமைச்சா் ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இந்நிலையில், கீழடி 9-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.  இந்த 9ம் கட்ட அகழாய்வு பணியானது கீழடி, அகரம், கொந்தகை என்னும் 3 இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு....!!