தேங்காய் நார் கழிவில் பதுங்கி இருந்த 12 அடி நீள மலைப்பாம்பு... லாவகமாக பிடித்த அதிகாரிகள்...!

தேங்காய் நார் கழிவில் பதுங்கி இருந்த 12 அடி நீள மலைப்பாம்பு... லாவகமாக பிடித்த அதிகாரிகள்...!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன். விவசாயம் செய்து வரும் இவர் ஐந்துக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மாட்டு தொழுவத்தின் அருகே தேங்காயிலிருந்து உறிக்கப்பட்ட நார் கூந்தலை போட்டு வைத்துள்ளார்.

இந்த நிலையில், சதாம் உசேன் அவரது மாட்டு தொழுவத்திற்கு சென்ற போது, தொழுவத்தின் அருகே அவர் போட்டு வைத்திருந்த நார் கூந்தலின் மேற்பகுதியில் மிகப்பெரிய பாம்பு ஒன்று இருந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதாம் உசேன் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில், கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நார் கூந்தலில் பதுங்கி இருந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து கடையநல்லூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் .

அவர்கள் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள்  பத்திரமாக கொண்டு விட்டனர்.