பாழடைந்து கிடக்கும் துணை சுகாதார நிலையம் தொய்வடைந்த மருத்துவ சேவை

பாழடைந்து கிடக்கும் துணை சுகாதார நிலையம் தொய்வடைந்த மருத்துவ சேவை

லெப்பை குடியிருப்பு கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த  துணை சுகாதார மையம் செயலற்று போனதால் குடியிருப்பு வாசிகள் அவதியில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட லெப்பை குடியிருப்பு கிராமத்தில் பொதுநலன் கருதி துணை சுகாதார மையம் அமைக்கப்பட்டது. இம்மையத்துடன்  தொடர்புடைய  லெப்பை குடியிருப்பு மற்றும் அதைச் சார்ந்த குடியிருப்பு வாசிகள் அத்தியாவசிய மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.

சுகாதார மையத்தில் செவிலியர்கள் தங்கி இருந்து கிராம மக்களுக்கு பகல் இரவு என அனைத்து வேளைகளிலும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. சுகாதார மையம் துவக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவ சேவை முறையாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் மருத்துவ சேவையில் தொய்வு ஏற்பட்டிருந்தது.மேலும், அனைத்து விதமான அத்தியாவசிய தேவைகளுக்கான சிகிச்சை வசதி வெகுவானது. 

இதையும் படிக்க | மத வெறியும், ஊழலும் நிறைந்த ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்...! ஆ.ராசா பேச்சு...!!

இதற்கு துணை சுகாதார மையத்தில் 24 மணி நேர சேவை மருத்துவ ரீதியான அதிகாரிகள் மட்டத்தில் பெரும்பங்கு தவிர்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பலதரப்பு பொதுமக்களின் பாதிப்பு தன்மை ஏறக்குறைய அதிகரித்துள்ளது. 

இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு ஆண்டாண்டு காலம் எடுத்துச் சென்ற போதிலும் அதற்கான நடவடிக்கையின் அறிகுறி இன்றளவும் கண்டறிய முடியவில்லை. மாவட்ட சுகாதார துறை சார்பில் லெப்பை குடியிருப்பு கிராமம் உட்பட அதைச் சார்ந்த அனைத்து குடியிருப்பு மக்களுக்கு நாள்தோறும் சிகிச்சை உட்பட மருத்துவ ஆலோசனை வழங்கிட துணை சுகாதார மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் குரலாக ஒலிக்கிறது.

 இதையும் படிக்க | புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில்...சித்திரை தேர்திருவிழா கோலாகலம்...!