ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ஐ சி யூ  வார்டில் தீ விபத்து....!

ஆலங்குடி  அரசு மருத்துவமனையில் உள்ள ஐ சி யூ  வார்டில்    தீ விபத்து....!

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ஐ சி யூ  வார்டில் உயர் மின்னழுத்தம் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் முயற்சியால் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் ஐசியூ வார்டு அமைக்கப்பட்டது. இதனால் மாரடைப்பு போன்ற அவசர நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருந்தது. 

இந்நிலையில் ஐ சி யூ வார்டில் மின்சாரம் சீராக இல்லை என்றும் அதனை சீரமைத்து தருமாறும் மருத்துவமனை நிர்வாகம் பலமுறை மின்சார வாரியத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் நேற்று இரவு திடீரென ஐ சி யூ வார்டில் உயர் மின்னழுத்தம் காரணமாக தீப்பிடித்தது. 

இதனால் அதிர்ச்சடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சைக்காக அங்கு இருந்த இரண்டு நோயாளிகளை உடனடியாக அப்புறப்படுத்தினர். மேலும் தீவிரமாக செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மானிட்டர் போன்ற சில கருவிகள் தீயில் சேதமடைந்தது. 


இந்த ஐ சி யூ வார்டு அமைந்துள்ள பகுதியில் டயாலிசிஸ் மெஷின் அமைக்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில் உயர் மின்னழுத்தம் காரணமாக மருத்துவமனையில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உயிருக்கு போராடும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் முறையான மின்சாரம் கிடைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க      |  அதிமுக -பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை? ஜெயக்குமார் பேட்டி!