குடியிருப்பில் புகுந்த யானைக்கூட்டம்... ரேஷன்கடை, வீடுகளை உடைத்து சேதம்...

கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்கா  மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஈட்டியார் எஸ்டேட் பகுதியில் யானைக்கூட்டம் ரேசன் கடையினை உடைத்து சேதப்படுத்தியதால் தோட்டத் தொழிலாள்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். 

குடியிருப்பில் புகுந்த யானைக்கூட்டம்... ரேஷன்கடை, வீடுகளை உடைத்து சேதம்...

வால்பாறையை அடுத்த முடீஸ் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டப்பகுதியில் தனது குட்டிகளுடன் கொஞ்சி விளையாடி வரும் யானைக்கூட்டம் இரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு வந்து குடியிருப்பை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.

நேற்று நள்ளிரவில் ஈட்டியார் எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைக்கூட்டம் அங்கிருந்த ரேசன்கடையை உடைத்து சேதப்படுத்தியது. அதில் இருந்த அரிசி பருப்பு, சர்க்கரையை  தூக்கி வீசியுள்ளது. பின்னர் குடியிருப்பின் ஜன்னல், கதவுகளை உடைத்தும் அருகே உள்ள கப்பைபாடி என்ற இடத்திற்கு வந்த யானைகள் குடியிருப்பில் கதவு, ஜன்னல்களை உடைத்து வீட்டில் இருந்த பீரோ, கட்டில்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. 
இதனால் பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்லமுடி 2-வது டிவிசனில் தொழிலாளர்கள் குடியிருப்பை உடைத்து முற்றிலும் சேதப்படுத்தியது. பகல் நேரங்களில் தொழலாளர்கள் குடியிருப்பில் அருகிலேயே நின்று கொண்டிருப்பதால் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வெளியில் வரவோ, தேயிலை பறிக்கவோ செல்ல மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் வனத்துறையினர் இரவு பகலாக யானைகளை கண்காணித்து வருகிறார்கள். 

இருப்பினும் அதில் யானைகள் ஒரு குழுவாக பிரிந்து சென்று மற்றொரு பகுதியில் சேதப்படுத்தி வருகிறது. பின்பு தெரிவித்த வனச்சரகர் இன்று முதல் இரவுநேரங்களில் வனக்காவலர்கள் கொண்டு  யானைகளை கண்காணிப்பதாகவும் தெரிவித்தார்.