தமிழகத்தை அச்சுறுத்தும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்! தீவிர வேட்டையில் தமிழக காவல் துறை

தமிழகத்தை அச்சுறுத்தும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்! தீவிர வேட்டையில் தமிழக காவல் துறை

தமிழகத்தை அச்சுறுத்தும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்! தீவிர வேட்டையில் தமிழக காவல் துறை

தொடரும் குண்டு வெடிப்புகள்

கோவையைத் தொடர்ந்துத் தூத்துக்குடியிலும் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. பாஜக பிரமுகருக்கு சொந்தமானப் பேருந்து ஒன்று  திருச்செந்தூரிலிருந்துப் பயணிகளை ஏற்றத் தூத்துக்குடிப் புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்ததையடுத்து, பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவைக்கு செல்ல தயார் நிலையில் இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பேருந்தின் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதனால் பேருந்திலிருந்தப் பயணிகள் அச்சம் அடைந்தனர் ஆனால் நல்வாய்ப்பாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை.

வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து, அப்பேருந்தின் உரிமையாளர் பாஜகவை சேர்ந்த ரமேஷ் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்பாராதவிதமாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சுகள் நடந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும்  தீவிர சோதனைகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


குற்றம்சாட்டும் அண்ணாமலை 

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பற்றிய செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக காவல் துறையினர் மீது அதிருப்தியில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தமிழக காவல் துறையினர் கண்ணியமும், நேர்மையும் கொண்டவர்கள் ஆனால் கடந்த பதினைந்து மாத காலமாக அவர்கள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டனர் என்றும் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் தனக்கு கீழுள்ள நல்லது செய்ய நினைக்கும் அதிகாரிகளை தனது அதிகாரங்களைக் கொண்டு மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: https://www. malaimurasu.com/posts/cover-story/Aims-Goebbels---heavy-criticism-on-BJP 


ஐந்தாயிரம் ஆண்டுகள் பாஜக இருக்கும் 

கோவை மாநகர காவல் துறை நண்பர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால்; நீங்கள் ஒன்றும் நிரந்தர ஏ.டி.ஜி.பி கிடையாது, இன்னும் சில வருடங்களில் ஓய்வுப் பெற்றுவிடுவீர்கள் ஆனால்  
நாங்கள் முப்பது வருடம், நாற்பது வருடம் அரசியலில் இருப்போம், ஐந்தாயிரம் ஆண்டுகள் பாஜக இருக்கும் எனவே காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

காவல் துறை நடவடிக்கை

பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்கள் மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறியிருந்த நிலையில் காவல் துறையினர் பதினைந்துப் பேரைக் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக பாஜக பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பதினாறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்கள் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கோவை, மதுரை மற்றும்  ஈரோடு மாவட்டங்களில் பதினைந்து நபர்களை தமிழக காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

------- அறிவுமதி அன்பரசன்