ஒரு சிறப்பு அரசாணை பிறப்பிக்க வேண்டும்... திருமாளவன் கோரிக்கை!!

ஒரு சிறப்பு அரசாணை பிறப்பிக்க வேண்டும்... திருமாளவன் கோரிக்கை!!

போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசிலிக்க  வேண்டும் ஒரு சிறப்பு அரசாணை பிறப்பிக்க வேண்டும் அதை விசிக வேண்டுகோளாக வைக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஆசிரியர்களுக்கு பணிநியமன போட்டித் தேர்விலிருந்து விலக்கு அளித்து நேரடியாக பணி நியமனம் செய்ய வலியுறுத்தி  ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

4 ஆவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.  ஆசிரியரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். 

பின்னர் பேசிய அவர், முதலமைச்சர் தீவிரமாக கருத்தில் கொண்டு இவர்களுக்கு வேலை வாய்ப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அரசு இவர்களுடைய கோரிக்கையை கனிவோடு பரிசிலிக்க  வேண்டும் எனவும் கூறிய அவர் ஒரு சிறப்பு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பதை அதை விசிக வேண்டுகோளாக வைக்கிறது எனக் கூறினார்.

இதையும் படிக்க:  நண்பகல் வேளையில் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்...!!