உச்சநீதிமன்ற வாயிலில் அம்பேத்கர் சிலை நிறுவவேண்டும் - தொல். திருமாவளவன்

உச்சநீதிமன்ற வாயிலில் அம்பேத்கர் சிலை நிறுவவேண்டும் - தொல். திருமாவளவன்



திருமாவளவன் மேடைப்பேச்சில் வலியுறுத்தல் 


  துகுறித்து அவர் பேசுகையில், “ சட்டம் கற்றறிந்தவர்கள் கூடி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் என்றென்றும் உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன் என உறுதி அளிக்கிறேன். அம்பேத்கருடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை, அவர் யாரோடும் ஒப்பிட முடியாத மாமனிதர், நாம் அவர்களின் கருத்துகளை எடுத்து சொல்லிவருகிறோம். நாட்டில் சோற்றுக்கு பஞ்சமா? தலைமைகளுக்கு பஞ்சமா? என்றால் தலைமைகளுக்கு தான் பஞ்சம் மக்களை நேசிக்கின்ற மக்களுக்கு சேவை செய்கின்ற தலைவர்களுக்கு நாட்டில் பஞ்சம் உள்ளது. எனவே தலைவர்களை உருவாக்கும் வேலையைத்தான் செய்து வருகிறேன்.

மேலும் படிக்க | தொல். திருமாவளவனின் பேச்சு கூட்டணியில் சர்ச்சை கிளப்புமா ?

அரசியலமைப்பு சட்டம்தான் ஒரு தேசத்தின் தலையாய விதி. இந்திய மண்ணில் மட்டும்தான் பிரதர் சிஸ்டர் என்று சகோதரத்துவத்தை போற்ற முடியாத கேடுகெட்ட சமூக கட்டமைப்பு உள்ளது. பாகுபாடுள்ள சமூகத்தை களைய ஒற்றை ஆயுத கிடங்காய் புரட்சியாளர் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினார். இன்னும் சாதி பாகுபாடு ஆதிக்க போக்கு அப்படியேத்தான் இருக்கிறது

புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கி தந்த அரசு அமைப்பு சட்டத்தின் மூலம் சமூக நீதி பசுமரத்து ஆணி போல் இருக்கிறது. சாதிய கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள சிறிய மாற்றத்தை பாசிச சக்திகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கல்வி வேலை மறுக்கப்பட்டவர்கள் இந்த அறுபது ஆண்டுகளில் உயர் பதவிகளுக்கு வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் அதனை ஏற்படுத்தி தரும் அரசியலமைப்பு சட்டத்தை அழிக்கத் துடிக்கிறார்கள். 

மேலும் படிக்க | புதுச்சேரி : ஜி 20 விழிப்புணர்வு மாரத்தான்...! மாணவர்கள் பங்கேற்பு...!


எந்த நேரத்திலும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி விடுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது. அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய வரலாற்று கட்டாயம் உருவாகி இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கரை இன்னும் ஒரு சாதிய தலைவராக பார்ப்பதை நாம் பார்க்கிறோம். பல நீதிமன்றங்களில் இன்னும் புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை வைப்பதற்கே  தடை போடுகிறார்கள். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு தேசிய தலைவர் ராஜஸ்தான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனு  சிலை அகற்றப்பட வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற வாயிலில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டும். எனவே அனைத்து நீதிமன்றங்களிலும் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு இங்குள்ள வழக்கறிஞர்களும் நீதி அரசர்களும் எங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கிட வேண்டும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.