மனைவியை தகாத வார்த்தைகளால் பேசிய நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை தகாத வார்த்தைகளால் பேசிய நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை தகாத வார்த்தைகளால் பேசிய நண்பரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள மின்சாரவாரிய அலுவலகம் முன்பாக யூசுப் அலி மற்றும் அவரது நண்பர் நாசர் அலி பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அவர்களின் நண்பர் அலிஷேர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை தகாத முறையில் பேசியது ஏன் எனக் கேட்டு, நாசர் அலியுடன் தகராறில் ஈடுபட்டார்.பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நாசர் அலியை சரமாரியாக குத்தினார். இதில்  நாசர் அலி மரணம் அடைந்தார். 

மேலும் படிக்க | ஆதரவற்ற, கண்பார்வையில்லாத, மாற்று திறனாளி குழந்தைகள், திருப்பதி கோயிலில் தரிசனம்

இந்த சம்பவம் தொடர்பாக அண்னா சாலை போலீசார் பதிவு செய்த வழக்கை அல்லிகுளம் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தோத்திரா மேரி, குற்றம் சாட்டப்பட்ட   அலிஷேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.