தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிமுக முறையாக நிதி ஒதுக்கவில்லை- அமைச்சர் கீதா  

தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டத்திற்கு கடந்த ஆண்டு அதிமுக சார்பில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிமுக முறையாக நிதி ஒதுக்கவில்லை- அமைச்சர் கீதா   

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மகளிருக்கான மாநில கொள்கை உருவாக்குவதற்கான மூன்றாவது ஆலோசனைக்கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கிராமப்புற பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாக மாநிலமாக தமிழகம் ஏற்க வேண்டுமென முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளையும் கவனத்தையும் தமிழக முதல்வர் செலுத்துகிறார். முதியோர் இல்லம் குழந்தைகள் இல்லம் முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குழந்தைகள் நல குழுவினர் மீது ஏதேனும் புகார் வந்தால் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.

திருமண நிதியுதவி கடந்த ஆட்சிகாலத்தில் 4 கிராம் தங்கத்திற்கு பதிலாக 8 கிராம் என அறிவித்தார்கள். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு அவர்கள் செய்யவில்லை நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. 2019 மார்ச் வரைக்கும் நிலுவையில் இருந்தவர்களுக்கு 20,000க்கும் திருமண உதவித்தொகை முதல்வர் அறிவுறுத்தலின் பேரில்  கொடுக்கப்பட்டுள்ளது. 2019 மார்ச் க்கு பிறகு அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட  3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் தற்போது வரை நிலுவையில் உள்ளது. முதல்வர் பதவியேற்பதற்கு முன்பாக சென்ற ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கிறது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது.

இந்த நிலையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று 762 ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு சமூக நலத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் திருமணங்கள் அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.திருமண நிகழ்வுகள் முழுவதும் போட்டோ எடுக்கப்பட வேண்டும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற குழந்தை திருமணங்கள் முறையாக காவல்துறையில் எப்ஐஆர் போடப்படவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. சென்றாண்டு சட்டப்படி எந்த ஒரு நடவடிக்கையும் இதற்காக எடுக்கப்படவில்லை தற்போது திமுக ஆட்சியில் சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்கள் குறித்து எந்தவித புகார்கள் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சென்ற ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குழந்தை திருமணங்கள் முழுவதும் சமரசம் பேசி முடிக்கப்பட்டு உள்ளது. அதனால் தான் எப்.ஐ. ஆர்  போடப்படாமல் இருந்துள்ளது. நகர் பகுதிகளுக்குள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.