ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் அதிமுக துரோகம் செய்துள்ளது: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் போது, வெளிநடப்பு செய்ததன் மூலம், ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் அதிமுக துரோகம் செய்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். 

ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் அதிமுக துரோகம் செய்துள்ளது: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்...

சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்ததன் மூலம், ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும், தெரிந்தே வேண்டுமென்றே அதிமுக துரோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், தீர்மானத்தை ஏற்காததில் இருந்தே அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.