வாக்கு எண்ணும் போது அதிமுகவினர் கவனமாக இருக்க வேண்டும் ..! திமுகவினர் திசைதிருப்பி வாக்குகளை மாற்றிவிடுவார்கள்...எடப்பாடி பழனிச்சாமி

வாக்கு எண்ணும் போது அதிமுகவினர் கவனமாக இருக்க வேண்டும் ..! திமுகவினர் திசைதிருப்பி வாக்குகளை மாற்றிவிடுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  

வாக்கு எண்ணும் போது அதிமுகவினர் கவனமாக இருக்க வேண்டும் ..! திமுகவினர் திசைதிருப்பி வாக்குகளை மாற்றிவிடுவார்கள்...எடப்பாடி பழனிச்சாமி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 11  மாவட்ட வார்டு   உறுப்பினர் பதவிக்கும். 98 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் அரசியல் கட்சி சார்பில் , வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், காஞ்சிபுரம்  தேர்தல் விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.

அப்பொழுது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், தற்போது நாம் எதிர்க்கட்சியாக இருந்து வருகிறோம் ஆனாலும், வேட்பாளர்களை பார்க்கும்போது இப்பொழுதே வெற்றி பெற்றதாக தோன்றுகிறது என தெரிவித்தார். சட்டமன்றம், நாடாளுமன்றம் தேர்தலைவிட மிக முக்கியமான தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல், மக்களுக்கு நேரடியாக பணி செய்வதற்கு உள்ளாட்சித் தேர்தல் தான் வழிவகுக்கும் எனக் கூறினார்.

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், "விளையும் பயிர் முளையிலே" அது போல வேட்பாளர்களின் முகத்தை பார்க்கும் பொழுது இப்போதே வெற்றி பெற்றது போல் தோன்றுகிறது என தெரிவித்தார்.  மேலும் நம்முடைய எதிரிகள் குறுக்குவழியில் செயல்படுவார்கள் என்றும் திமுக நிச்சயம் தில்லுமுல்லு வேலை செய்து வெற்றி பெற முயற்சி செய்வார்கள். அதையும் மீறி நாம் வெற்றி பெற வேண்டும் என்றார்.

  உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலினும் மாறிமாறி மேடைகளில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி வந்தனர். ஆனால் நீட் தேர்வு தற்போது நடைபெற்று தான் வருகிறது. திமுகவின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது என தெரிவித்தார். தொடந்து பேசிய அவர்,   வாக்கு என்னும்போது கவனமாக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், திமுகவினர் திசை திருப்பி வாக்குகளை  மற்றிவிடுவார்கள் எனப் பேசினார்.