வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தால் அரசு நிர்வாகம் சிக்கலை சந்தித்து வருகிறது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு....

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடுச் சட்டம் ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தால் அரசு நிர்வாகம் சிக்கலை சந்தித்து வருகிறது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு....

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன், அரசியல் லாபத்துக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வன்னியர்களுக்கு 10. 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தால் அரசு நிர்வாகம் சிக்கலை சந்தித்து வருகிறது என்றும், இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தவறு எனவும், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மேல் முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.