தேசிய கல்வி கொள்கையை ஏற்று கொள்ளுங்கள் - தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர் என் ரவி வேண்டுகொள்

தேசிய  கல்வி கொள்கையை ஏற்று  கொள்ளுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்று கொள்ளுங்கள் - தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர் என் ரவி வேண்டுகொள்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்  19 ஆயிரத்து 363 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களும் பட்டயங்களும் தரப்பட்டன.

இந்த விழாவில் பேசிய ரவி, நமது கல்வியில் புதிய மாற்றங்கள் தேவைப்படுவதாக கூறினார்.  அவற்றை முன்னெடுக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அதில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஆளுனர் கேட்டு கொண்டார்.