மழைநீர் வடிகால் கால்வாய் தோண்டும் பணியின்போது விபத்து...  மண்ணுக்குள் சிக்கிய நபருக்கு சிகிச்சை...

சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய் தோண்டும் பணியின்போது மண் சரிந்து விபத்துக்குளானதில், மண்ணுக்கு அடியில் சிக்கியவரை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மழைநீர் வடிகால் கால்வாய் தோண்டும் பணியின்போது விபத்து...  மண்ணுக்குள் சிக்கிய நபருக்கு சிகிச்சை...

சென்னை யானைகவுனி பகுதிக்குட்பட்ட வணிகவரித் துறை அலுவலகம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர்  கால்வாய்க்குள் இறங்கிப் பணி செய்து கொண்டிருந்தபோது மண் சரிந்து ரஞ்சித் மீது விழுந்ததில் அவர் மயக்கமடைந்தார். 

இதனையடுத்து உடன் பணியாற்றியவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு ரஞ்சித்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.   இந்த சம்பவம் தொடர்பாக அரசு ஒப்பந்ததாரர் செந்தூர் முருகன் என்பவரிடம் யானைக்கவுனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.