முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சொத்து குவிப்பு வழக்கு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது பங்குதாரர்கள் உள்ளிட்ட 17 மீது சொத்துகுவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சொத்து குவிப்பு வழக்கு...
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

 
அரசு ஒப்பந்தப்புள்ளி பணிகளை தருவதாகக் கூறி 1.25 கோடி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பாதிக்கப்பட்ட கான்டிராக்டர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் சென்னையில் 15 இடங்கள்,கோவையில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல்,காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது பங்குதாரர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.