போக்குவரத்து பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை- தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்து பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

போக்குவரத்து பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை- தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்து பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அரசின் செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகிய நிறுவனங்களில், பணியாற்றி வரும், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 பேருக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2021ஆம் ஆண்டில் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு தலா 85 ரூபாயும், 151 நாட்களிருந்து 199 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு தலா 195 ரூபாயும் மற்றும் அதற்கு மேற்பட்ட நாட்கள் பணியாற்றிய ஊழியர்களுக்கு தலா 625 ரூபாய் என மொத்தம் 7 கோடியே 1 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.