சாதனை படைத்த மாணவ, மாணவிகள் கண்ணீர் பேட்டி... உதவி செய்தால் தங்கம் வெல்வோம்...

பொருளாதார உதவி செய்தால் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்று தருவோம் என திருப்பத்தூர் தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதனை படைத்த மாணவ, மாணவிகள் கண்ணீர் பேட்டி... உதவி செய்தால் தங்கம் வெல்வோம்...

திருப்பத்தூர் மாவட்டம்  புதுப்பேட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் கராத்தே பயிற்சி கூடத்தில் மாணவ மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம், போன்ற 30 வகையான தற்காப்புக் கலைகள் பயிற்சி அளிக்கப்படுகின்றன. 

இந்த பள்ளியில் பயின்ற  மாணவ மாணவிகள் அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர். ன்மேலும் இப்பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் நான்கு தங்கப் பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் மலேஷியாவில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் 3 தங்க பதக்கமும் 2 வெள்ளி பதக்கமும் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 

இந்த பெருமைகுரிய சாதனைகளை செய்த பாரத் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் கராத்தே பயிற்சி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பொருளாதராமின்றி ஏழ்மையில் நிலையில் தவித்து வருகின்றனர்.

தற்போது இந்த கலையை  நம்பி இருக்கும் மாணவ மாணவிகளும் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ளதால் அடுத்தகட்ட பயிற்சிக்கும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கான திறமை இருந்தும் தவிர்த்து வருகின்றனர். மேலும் தற்காப்பு கலையை விட்டு வேறு வேலைக்குச் செல்ல நிலைமை ஏற்படுகிறது.

எனவே தமிழக முதல்வர் இதனை கருத்தில் கொண்டு திருப்பத்தூரில் விளையாட்டு துறையிலும் சாதிக்கத் துடிக்கும் மாணவ மாணவிகள் பயிற்சி பெறும் வகையில் தற்காப்பு கலை மற்றும் நவீன வசதி கொண்ட பயிற்சி பள்ளியை உருவாக்கிக் கொடுத்தாள் கண்டிப்பாக இந்தியாவிற்காக விளையாடி தங்கப் பதக்கம் பெற்றுத் தருவார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார் தற்காப்பு கலை ஆசான்.