முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை.... அமைச்சர் துரைமுருகன்!!

முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை.... அமைச்சர் துரைமுருகன்!!

கள்ளக்குறிச்சி தொகுதி, பாக்கம்பாடி அணைக்கட்டில் இருந்து செல்லும் வரத்து வாய்க்காலை தூர்வார முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  அதனை தொடர்ந்து ஆளுநர் மீதான உரையின் காரணமாக சட்டமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி  வைக்கப்பட்டது.

அதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சர்கள் திட்டங்கள் அதன் மீதான விவாதங்கள் கேள்விக்கு பதில்கள் போன்றவை நடைபெற்று வருகின்றன.

சட்டப் பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கள்ளக்குறிச்சி தொகுதி சின்னசேலம் ஒன்றியம் பாக்கம்பாடி அணைக்கட்டில் இருந்து செல்லும் வரத்து வாய்க்காலை தூர்வார அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அனைத்து கிராம ஏரிகளுக்கும் செல்லும் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நிதி நிலைமை அடிப்படையில் கள்ளக்குறிச்சி வாக்கம்பாடி அணைக்கட்டில் இருந்து செல்லும் வரத்து வாய்க்காலை தூர்வார முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  யாரும் எங்கேயும் தப்பித்துப் போக முடியாது..... பாஜக தலைவர் அண்ணாமலை!!