சினிமாவில் பெண்‌ கதாபாத்திரம் வடிவமைப்பு குறித்து நடிகை சம்யுக்தா கேள்வி!

சினிமாவில் பெண்‌ கதாபாத்திரம் வடிவமைப்பு குறித்து நடிகை சம்யுக்தா கேள்வி!

கேள்விகளை தொடுத்த சம்யுக்தா

கடந்த வாரம் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் விரூபாக்ஷா படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சாய் தரம்தேஜ் , சம்யுக்தா, தனஞ்செயன், சக்திவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தமிழில் வெளியிடுகிறார். மே மாதம் 05ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

மேலும் படிக்க | சென்னை மேயருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது - நெகிழ்ச்சியில் பிரியா ராஜன்

சம்யுக்தா

எனக்கு தமிழில் வாத்தி படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. விரூபாக்ஷா திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும். தியேட்டரில் பார்க்கும் போது அந்த உணர்வு சிறப்பாக இருக்கும். படம் பார்த்துவிட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Samyuktha Speech at Virupaksha Characters Introduction Event | Samyuktha as  Nandini - YouTube

ஒரு விஷயத்தில் முதலில் நான் ஓகே சொல்லிக்கொண்டு பின்னர் நான் யோசிப்பேன். பிறந்ததில் இருந்தே எனக்கு நம்பிக்கை அதிகம். விரூபாக்ஷா போன்ற கமர்ஷியல் படத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டத்தக்கது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்ற கேள்வியே வராத மாதிரி முன்னோக்கி செல்ல வேண்டும்.

மேலும் படிக்க | கொடநாடு வழக்கை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் பணியிட மாற்றம்

Actress Samyuktha Menon Glam Stills - From Virupaksha Movie Trailer Launch  - Social News XYZ
அனைத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். பெண் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். திறமையான நடிகைகள் இங்கு இருக்கின்றனர். வாத்தி படத்தை விட இப்படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளேன்.