தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்; யாருக்கு இ-பாஸ் அவசியம்.. முழு விவரம் உள்ளே

தமிழகத்தில், கொரோனா இரண்டவது அலை பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்; யாருக்கு இ-பாஸ் அவசியம்.. முழு விவரம் உள்ளே

இதனால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு தற்போது ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 
இந்த புதிய தளர்வுகளின் அடிப்படையில், யார் யாருக்கெல்லாம் இ-பதிவு அவசியம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வராத கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியை மேற்கொள்பவர்களுக்கு இ-பதிவு அவசியம் என தமிழக அரசு கூறியுள்ளது.

பிளம்பர் உட்பட சுய தொழில் புரிபவர்கள், தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளில் உள்ளவர்கள், மின் பணியாளர், கணினி, இயந்திரங்கள் பழுது நீக்குபவர், பிளம்பர்கள், தச்சர் ஆகியோர்கள் இ-பதிவுடன், இந்த பணி மேற்கொள்ளப்பட வேண்டிய சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலையை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் வாடகை டாக்ஸிகள், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் இ-பதிவு கட்டாயம்.

இதேபோன்று கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள 27 மாவட்டங்களை பொறுத்தவரை, மேற்கண்ட 11 மாவட்டங்களுக்கு அறிவித்துள்ள இ-பதிவு விதிமுறைகள் அனைத்தும் பொருந்தும். 

ஆனால் கூடுதலாக, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இ-பதிவு செய்திருக்க வேண்டும். அதேபோல் ஐடி கம்பெனிகளில் 20 சதவீத பணியாளர்கள் வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இ-பதிவு செய்து கொண்டு தங்கள் பனியிடத்திற்கு செல்லலாம்.