"அடேங்கப்பா எவ்வளோ பேரு".. களைகட்டிய மீன்பிடித் திருவிழா.. உற்சாகமாக மீன்களை பிடித்துச் சென்ற மக்கள்!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்களை பிடித்துச் சென்றனர்.

"அடேங்கப்பா எவ்வளோ பேரு".. களைகட்டிய மீன்பிடித் திருவிழா.. உற்சாகமாக மீன்களை பிடித்துச் சென்ற மக்கள்!!

விஷ்ணு தீர்த்தம் என்றழைக்கப்படும் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருவாதவூர் பெரிய கண்மாயில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை. தடையை மீறிய ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குகளும் பதிவானது.

இந்தநிலையில் இன்று முறைப்படி திருவாதாவூர் பெரிய கண்மாய் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.  ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாகனங்கள் மூரம் நள்ளிரவு முதலே  கண்மாய் பகுதியில் குவியத் தொடங்கினர். அதிகாலை 5 மணி அளவில் கிராம அம்பலகாரர்கள் கொடியசைக்க, வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட மீன்பிடி கருவிகளுடன் மக்கள் கூட்டம் உற்சாகத்துடன் கண்மாய்க்குள் பாய்ந்தது. விரால், ஜிலேபி,கட்லா உள்ளிட்ட பல்வேறு வகையான  மீன்களை போட்டி போட்டு பிடித்துச் சென்றனர்.