கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : 4 பேர் ஆஜரான நிலையில் நீதிமன்றம் ஒத்திவைப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : 4 பேர் ஆஜரான நிலையில் நீதிமன்றம் ஒத்திவைப்பு!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சையான், வாளையார் மனோஜ், ஜம்ஷிர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

வழக்கில் தொலைத்தொடர்பு மின்னணு சாதனங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் பல்வேறு சாட்சிகள் இடையே சிபிசிஐடி போலீசார் சார்பில் விசாரணை நடத்த அரசு தரப்பு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கினை விசாரணை செய்த நீதிபதி எதிர்வரும் ஜூலை 28ம் தேதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : 2021 - ல் வைக்கப்பட்ட 148 கோரிக்கைகள் பற்றி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்...!

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், கொடநாடு வழக்கு சிபிசிஐடி போலீசார் சார்பில் இதுவரை 140 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், இவ்வழக்குடன் தற்கொலை செய்து கொண்ட கொடநாடு எஸ்டேட் கணினி பொறியாளர் தினேஷ் வழக்கு மற்றும் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தது உள்ளிட்ட இரண்டு வழக்கும் கூடுதலாக விசாரிக்கப்பட்டு வருவதாக கூறினார்.