44-வது சர்வதேச செஸ் விளையாட்டு போட்டி: மெட்ரோ ரயில் நிலையங்களில் விளம்பர பதாகைகள்!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விளம்பர பதாகைகள்  அமைக்கப்பட்டுள்ளது.

44-வது சர்வதேச செஸ் விளையாட்டு போட்டி: மெட்ரோ ரயில் நிலையங்களில் விளம்பர பதாகைகள்!!

44-வது சர்வதேச செஸ் விளையாட்டு போட்டிகள் முதல் முறையாக சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

180-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டிகள் வரும் 28-ஆம் தேதி தொடங்க  உள்ளது. செஸ் போட்டிக்கான விளம்பர ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

குறிப்பாக, சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல், பிரதான சாலைகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் கட்டம் போல வண்ணம் பூசப்பட்டுள்ளது.

பேருந்து போக்குவரத்துக்கு அடுத்து, மக்கள் அதிகம் பயன்படுத்தும் மெட்ரோ ரயில் நிலையங்களில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.  சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில், நம்ம சென்னை நம்ம பெருமை, வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.