மீண்டும் பொதுவெளியில் மாஸ்க் கட்டாயம் இல்லையென்றால் ரூ.500 அபராதம்!

மீண்டும் பொதுவெளியில் மாஸ்க் கட்டாயம் இல்லையென்றால் ரூ.500 அபராதம்!

தமிழகத்தில் படிபடியாக குறைந்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாகவே படிபடியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதன்படி நேற்று சென்னை ஐஐடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 700 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா உறுதி செய்யப்பட்ட மொத்தம் 30 பேரில் 19 பேர் மாணவர்கள் 1 பணியாளர் என்பதை சுகாதாரத்துறை சார்பில் தெரிவித்திருக்கின்றனர். மேலும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவரும் லேசான அறிகுறிகளுடன் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர், தொடர்ந்து படிபடியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மீண்டும் பொதுவெளியில் மக்கள் மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும், அப்படி அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் என சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.