”காவேரி விவகாரத்தில் கூட்டணி தர்மத்தை பார்க்க கூடாது” சசிகலா வலியுறுத்தல்!

”காவேரி விவகாரத்தில் கூட்டணி தர்மத்தை பார்க்க கூடாது” சசிகலா வலியுறுத்தல்!

காவேரி விவகாரத்தில் திமுக அரசு கூட்டணி தர்மத்தை பார்த்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார்.


திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக இணைய வாய்ப்பு உள்ளதாகவும், ஒருங்கிணைக்கும் முயற்சி நன்றாக நடப்பதாகவும் சசிகலா கூறினார்.

திமுக வாக்குறுதியில் தெரிந்தே கொடுக்க முடியாததை கொடுக்கிறேன் என்று சொல்லியது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறியவர், நிதி நிலைமை தெரிந்தும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்தது மக்களை ஏமாற்றும் செயல் தானே என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா, 1996 லிருந்தே அமலாக்கத்துறை விசாரணைகள் நடைபெற்று வருகிறது. என்னை விசாரித்த போதெல்லாம் நான் சரியாக ஒத்துழைப்பு கொடுத்தேன். அதேபோல், அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கைது செய்து செய்யப்பட்டார். அப்போது திமுக அரசு எங்கள் குடும்பத்தை சிறையில் அடைத்தனர். நாங்கள் அதை பெரிதுபடுத்தவில்லை.

இதையும் படிக்க : குற்றாலம் மெயின் அருவியில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்...!ஆனந்தத்தில் சுற்றுலா பயணிகள்!

ஆனால் தற்போது அதே திமுக அரசில், அமலாக்கத்துறை விசாரணையின் போது பெண் அதிகாரியை அடிக்கிறார்கள். தமிழக அரசில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு ஒரு நியாயம் மத்திய அரசிலிருந்து வரும் அதிகாரிகளுக்கு ஒரு நியாயமா? என்று கேள்வி எழுப்பியவர், அமைச்சராக இருப்பவர்களே இப்படி வழிகாட்டு முறைகளை காண்பித்தால் மற்றவர்களை எப்படி கண்ட்ரோல் செய்ய முடியும் என்று விமர்சனம் செய்தார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கா? பெண்கள் வெளியே வர முடியவில்லை. எங்கு பார்த்தாலும் பார். திமுக அரசை பேச பத்திரிகைக்காரர்கள் கூட பயப்படுகின்றனர் என்று சாடினார். 

காவிரி தண்ணீர் பிரச்சனையில் ஜீன், ஜீலை 40 டிஎம்சி தண்ணீர் வர வேண்டும். ஆனால், 3 டி எம் சி தண்ணீர் மட்டுமே கொடுத்துள்ளனர். காவேரி விவகாரத்தில் திமுக அரசு கூட்டணி தர்மத்தை பார்த்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியாது, கொடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் சென்று செயல்பட வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.