அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சையளித்த ஊழியர்... தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழப்பு...

அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு வந்த இளைஞருக்கு மருத்துவ ஊழியர் முதலுதவி சிகிச்சை. 

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சையளித்த ஊழியர்... தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழப்பு...

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு  இன்று அதிகாலை கவின்(23)என்ற  இளைஞர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்கு வந்துள்ளார்.இந்நிலையில் இரவு நேர மருத்துவர் இல்லாமலும் இரவு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் சிகிச்சை அளித்ததாகவும் இதனால் அந்த இளைஞன் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இறந்த இளைஞரின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடி மருத்துவர்கள் இல்லாததே மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு.

காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே  அரசு மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இதில்  பல வருடங்களாக போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றது.மேலும் விபத்து மற்றும் தீவிரசிகிச்சை பிரிவுகள் இருந்து இங்கு வரும் நோயாளிகளை ஈரோடு, கோவை, திருப்பூர், ஆகிய பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றனர். 

மேலும் காங்கேயம் பகுதியில் உள்ள தேங்காய் உலர்க்களங்கள், எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் கூலித்தொழிலாளிகள் இந்த மருத்துவமனையையே நம்பி உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஜெ நகர் பகுதியை சார்ந்த கவின் (23) என்பருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கவின் அவருடைய நண்பர்களை அழித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். அரசு மருத்துவமனையின் கதவுகள் உள்பக்கமாக தாளிட்டு இருந்துள்ளது.

நீண்டநேரம் கதவை தட்டிய பின்னர் அரசு மருத்துவமனை ஊழியர்  கதவை திறந்துள்ளார். அவரிடம் கவின் தனக்கு நெஞ்சு வலி என கூறியுள்ளார். அரசு மருத்துவமனை ஊழியரும் ஊசி ஒன்றை போட்டுவிட்டு இரண்டு மாத்திரைகளை கொடுத்து அனுப்பியுள்ளார். தங்கள் வந்த இருசக்கர வாகனத்தை எடுக்கும் முன் கவினுக்கு மீண்டும் நெஞ்சு வலிப்பதுபோல் உள்ளது என கூறிக்கொண்டே வாந்தி எடுத்துள்ளார். கவினின் நண்பர்கள் மீண்டும் மருத்துவமனை கதவை தட்டி ஊழியரை அழைத்து பரிசோதை செய்துள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கவின் இறந்துவிட்டார் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளார். இதை கேட்ட கவினின் நண்பர்கள் உறவினர்களுக்கு தெரிவிக்கவே ஜெ நகர் பகுதி பொதுமக்கள் மருத்துவமனையில் ஒன்றுகூடி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞன் மருத்துவர் இல்லாமல் தவறான சிகிச்சையை மருத்துவமனை ஊழியர் கொடுத்தததால் தான் இறந்துவிட்டான் என் குற்றம் சாட்டுகின்றனர்.

கவினின் தந்தை சேகர்  ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளராகவும் தாய் விமலா கூலித் தொழிலாளியாகவும் பணி புரிகின்றனர். திருமணம் ஆகி ஸ்னேகா  என்ற மனைவியும் ஜெகதீஷ் ஒரு வயது குழந்தையும் உள்ளனர். கவினும் தினக்கூலியாக வர்ணம் பூசும் தோழிக்கு சென்று வந்துள்ளார்.