தமிழகத்தில் கால்நடைகளுக்கு நோய் தாக்கம் இல்லை! - அமைச்சர் அனிதா...

தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் இல்லை என மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கால்நடைகளுக்கு நோய் தாக்கம் இல்லை! - அமைச்சர் அனிதா...

சென்னை | நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் தலைமையில் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன்.

நேற்று மீன்வளத்துறையின் ஆய்வு கூட்டமும் இன்று கால்நடை துறையின் ஆய்வு கூட்டமும் நடைபெற்றது.
பண்ணைகள் முறையாக அமைய வேண்டும், விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் பசுமை தீவனம் உற்பத்தி செய்வது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது. கால்நடை தடுப்பூசி தொடர்பாக முதல்வரின் உத்தரவை தொடர்ந்து கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.+

மேலும் படிக்க | சீனாவில் அதி வீரியத்துடன் மீண்டும் மீண்ட கொரோனா...இந்தியாவின் நிலை என்ன? புதிய வகை கொரோனா குறித்த தகவல்கள் விரிவாக!!!

பாதிப்பு உள்ள பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்த ஆணையிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும். மாவட்ட நிர்வாகத்திடம் 10 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்கப்பட்டு பின்னர் தலைமை அலுவலகத்தில் அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

ஜல்லிக்கட்டு இந்தாண்டு நடைபெறும் பொழுது காளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது வகையில் துறை உடன் நின்று செயல்படும். ஒன்றிய அரசு வளங்கவேண்டிய கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி இதுவரை கிடைக்காத காரணத்தால் முதல்வர் மத்திய கால்நடை துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

மேலும் படிக்க | இந்தியாவிலேயே முதல்முறையில் சைதாப்பேட்டைக்கு தான் இந்த வசதி வர போகுது..!

இந்த மாதமே நமக்கு கிடைக்கவேண்டிய 90 லட்சம் டோஸ்களில் 60 டோஸ் வழங்கப்படும் என ஒன்றிய கால்நடை துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கால்நடை நோய் தாக்கம் இல்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக 5 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது.

அண்டை மாநிலங்களில் இருந்து கால்நடைகள் மற்றும் பறவைகள் கொண்டுவரும் வாகனகள் முழுமையான பரிசோதனை முடிந்து பின்னர் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்றார்.

மேலும் படிக்க | தேசிய கீதத்தை அவமதித்த கால்நடை மருத்துவர்... இதுகூட தெரியாதவர் டாக்டரா? முணுமுணுத்த பொதுமக்கள்