சுய விளம்பரத்திற்காக முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறுகிறார் அண்ணாமலை - கே.எஸ்.அழகிரி!

சுய விளம்பரத்திற்காக முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறுகிறார் அண்ணாமலை - கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சுய விளம்பரத்திற்காக முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில்  செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, அண்ணாமலை சுய விளம்பரத்துக்காக முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறி வருவதாகவும், இவரின் இந்த செயல்பாடு அவரது கட்சிக்கே பிடிக்கவில்லை என்றும் கூறினார். 

இதையும் படிக்க : அண்ணாமலை சொன்னால்...நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!

தொடர்ந்து பேசிய அவர், ஊழல் பட்டியலை வெளியிடுவதாகக் கூறிய அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும், அவர் வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு தவறானது என்றும் கூறினார்.