கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் - அண்ணாமலை குற்றச்சாட்டு

ஜமேஷா முபின் இறப்பதற்கு முன் தனது செல்போனில் வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பாணியில் உள்ளது

கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் - அண்ணாமலை குற்றச்சாட்டு

தேசியப் புலனாய்வு முகமை விசாரணை வேண்டும்

கோவை உக்கடத்தில் நடைபெற்றது தற்கொலைப்படைத் தாக்குதல் என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இச்சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பாணியில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை உக்கடத்தில் நடைபெற்றது தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பகீர் தகவலை வெளியிட்டார்.  இச்சம்பவத்தில் தொடர்புடைய ஜமேஷா முபின் இறப்பதற்கு முன் தனது செல்போனில் வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பாணியில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க: அண்ணாமலைக்கு தக்க பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி...!

தமிழ்நாடு டிஜிபிக்கு அண்ணாமலை கேள்வி

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு டிஜிபி கூறாதது ஏன் எனவும் அண்ணாமலை கேள்வியெழுப்பினார்.

தமிழ்நாடு உளவுத்துறையை விமர்சித்த பாஜக தலைவர்

தமிழ்நாடு உளவுத்துறை அரசியல் காரணங்களுக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் உளவுத்துறையில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். கோவை உக்கடம் கார் வெடிவிபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு பாஜக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.