கூட்டுறவு சங்க முன்னாள் செயலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கூட்டுறவு சங்க முன்னாள் செயலர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத ஆவணங்கள் சிக்கியதாக தகவல் தெரியவந்துள்ளது.

ஆலங்குளம் அருகேயுள்ள ஊத்துமலை கூட்டுறவு சங்க செயலராக இருந்தவர் அய்யனார். கூட்டுறவு சங்கத்தில் பொய்யான கணக்குகளை தொடங்கி 6 கோடி ரூபாய்க்கும் மேல், முறைகேடாக கையாடல் செய்ததாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அய்யனாரின் மனைவி வளர்மதியும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊத்துமலை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், அவரது வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.