''அரிக்கொம்பன் சுதந்திரமாகவும், நலமுடனும் இருக்கிறது'' - வனத்துறை செயலர் சுப்ரியா சாகு ட்வீட்..!

''அரிக்கொம்பன் சுதந்திரமாகவும், நலமுடனும் இருக்கிறது'' - வனத்துறை செயலர் சுப்ரியா சாகு ட்வீட்..!

வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை தற்போது சுதந்திரமாகவும், நலமுடனும்  இருப்பதாக வனத்துறை செயலர் சுப்ரியா சாகு ட்வீட் செய்துள்ளார். 

தேனி மாவட்டத்தை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கடந்த வாரம், கோதையாறு குட்டியாறு வனப்பகுதிக்குள் விட்டு சென்றனர். இதையடுத்து அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், தற்போது யானை நலமுடன் இருப்பதாக வனத்துறை செயலர் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டத்தை கலக்கி வந்த அரிக்கொம்பன் யானையை கடந்த வாரம் வனத்துறை நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் முத்து குழி என்ற வணபகுதிக்குள் விட சென்ற நிலையில் யானையின் பாரம் தாங்க முடியாமல் கோதையாறு குட்டியாறு வணபகுதிக்குள் விட்டு சென்றனர் களக்காடு முண்டந்துரை வனத்துறையினர். அன்று முதல் 20 மேற்பட்ட வனத்துறையினர் அரிக்கொம்பனை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், வனத்துறை  செயலர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர்  பக்கத்தில் அரிசிக்கொம்பன் சுந்திரமாகவும், நலமுடன் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார். மேலும், ரேடியோ காலர் மற்றும் கேமரா ட்ராப்கள் மூலம் அரிக்கொம்பனை கண்காணித்து வருகின்றனர். என களப்பணியாளர்கள்  கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். 

கடந்த சில தினங்கள் முன்பு இதே வணத்துறை செயலாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிகொம்பன் பற்றி தவறான பதிவை பதிவிட்டு பின் அந்த பதிவை நீக்கியது குறிப்பிட்டத்தக்கது.

இதையும் படிக்க     | அரிக்கொம்பனை ரவுடியாக சித்தரித்து செய்தி வெளியிட தடைக்கோரிய மனு தள்ளுபடி!