தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலம் எது தெரியுமா? அதன் காரணம் என்ன?

முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழ்நாடு அரசால் அரிட்டாப்பட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலம் எது தெரியுமா? அதன் காரணம் என்ன?

* மதுரை அருகே 6-ம், 7-ம் நூற்றாண்டு வரலாற்றுச் சான்றுகள் அதிகமுள்ள அரிய வகை பறவைகள் அதிகம் வசிக்ககூடிய பல்லுயிர் வளம் கொண்ட அரிட்டாப்பட்டி மலைக்குன்றுகள் கொண்ட பகுதிகள் 'பல்லுயிர்ப் பாரம்பரியத் தலம்’ ஆக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

* மதுரையில் இருந்து 24 கிமீ., தொலைவில் அழகர்மலைக்கும், பெருமாள் மலைக்கும் இடையில் அழகிய மலைகள் சூழ் கிராமமான அரிட்டாப்பட்டி அமைந்துள்ளது.

* இங்குள்ள கண்மாய் நீர் நிறைந்தே காணப்படுகிறது. கடும் கோடையிலும் வற்றாத நீர்ச்சுனை இங்கு உள்ளது.

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 5 நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வாத்தி ரெய்டு போல் ஐ டி ரெய்டு...

* ஏழு மலைக் குன்றுகள், பலவகை மரங்கள், செடிகள், கொடிகள், விலங்குகள், ஊர்வன, பறப்பன, இயற்கையோடு இணைந்து வசிக்கும் மக்கள் மற்றும் ஆண்டு முழுவதும் செழித்து நடக்கும் விவசாயம் என பசுமை போர்த்திய கிராமமாக அரிட்டாப்பட்டி திகழ்கிறது

* மலைக்குன்றுகளில் சமணர்கால குகைகள், சமணப்படுகை, மகாவீரர் புடைப்புச் சிற்பம் என்று இன்றளவும் பாரம்பர்யச் சின்னங்களாக கிராம மக்களால் பாதுகாக்கப்படுகிறது.

* பல்லுயிர் வளம் கொண்ட அரிட்டாப்பட்டி, மீனாட்சிப்புரத்தை உள்ளடக்கிய மலைக்குன்றுகள் கொண்ட 193.215 ஹெக்டேர் பகுதியை பல்லுயிர் பாரம்பரிய உயிர்ப்பன்மையம் வாய்ந்த பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பணியாளர்கள் தினுசாக கையில் எடுத்த ஐடியா...என்ன தெரியுமா!!!

* அரிடாப்பட்டியை கிரானைட் குவாரியாக்கும் முயற்சிகளை பல ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர்.

* 2015ம் ஆண்டு முதல் அரிட்டாப்பட்டியில் பல்வேறு ஆய்வுகள் வரலாற்று ஆர்வலர்களாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகலும் நடத்தப்பட்டுள்ளது

* லகடு வல்லூறு என்ற அரிதாகிப்போன பறவை கண்டறியப்பட்டுள்ளது.இந்த பறவை ராஜஸ்தானிலும் தமிழகத்தில் அரிட்டாபட்டியிலும் மட்டுமே அரிதாக காணப்படுகிறது.

மேலும் படிக்க | மாநில அளவிலான மருத்துவர்கள் கருத்தரங்கம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்..!

* இதுவரை 161 பறவையினங்கள் இங்கு வசிப்பதாக பதிவிடப்பட்டுள்ளது.

* 46 வகை வண்ணத்துப்பூச்சிகள், புள்ளி மான்கள், கடமான், நரி, காட்டுப்பன்றிகள், உடும்பு, பல பாம்பினங்கள், எண்ணவற்ற வண்டினங்கள், இரு வாழ்விகளும் கண்டறியப்பட்டுள்ளது.

* பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அரிட்டாப்பட்டியை அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல்...! உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்...!

--- பத்திரிக்கையாளர் நந்தினி.