அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இவரின் பெயர் தான் சூட்ட வேண்டும்… எம்.எல்.ஏ உதயநிதி…  

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என திருவல்லிக்கேணி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

2021 -22ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் கன்னிப்பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதில் பெட்ரோல் விலை குறைப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்வதாக  தெரிவித்தார். மேலும், கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சென்னையை மேம்படுத்த அதிமுக அரசு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையான நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் தான் நீட் வந்தது எனவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.  மேலும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் எனவும் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.