அரசு பேருந்தில் குழந்தைகளுக்கு இலவச பயணம்.. உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு!!

அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்குட்பட குழந்தைகளுக்கு இலவச பயணம் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பேருந்தில் குழந்தைகளுக்கு இலவச பயணம்.. உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கடந்த 5ம் தேதி சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

அதன்படி, அரசு பேருந்துகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட மேலாண் இயக்குனர்களுக்கு போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கோபால் அனுப்பியுள்ள கடிதத்தில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.