பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி சுப்ரமணிய சுவாமி ஆதரவு ….

பா.ஜ.க எம்.பி சுப்ரமணிய ஜாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பேசி வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி சுப்ரமணிய சுவாமி ஆதரவு ….

பா. ஜ.க ரா ஜ்யசபா எம்.பி சுப்ரமணிய சுவாமி பாலியல் புகாரில் சிக்கியுள்ள பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு அதரவு  பேசுவதாக எண்ணி, ஜாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பேசி வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், இந்திய அரசின் தலைமை செயலாளர், தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 அதில் "சமீபத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ரா ஜகோபாலன் பாலியல் புகாரில் சிக்கினார். சம்மந்தப்பட்ட மாணவி மட்டுமல்லாது பிற மாணவிகளின் புகார்களையும் பள்ளி நிர்வாகம் அலட்சியம் செய்ததும், அதை வெளிக்கொண்டு வராமல் தவிர்த்ததும் சட்டப்படி குற்றமாகும்.இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்நிலையில் பா. ஜ.க மூத்த தலைவரும், ரா ஜ்யசபா எம்.பி-யுமான சுப்ரமணிய சுவாமி பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக நின்று பல்வேறு அவதூறுக் கருத்துக்களை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பேசி வருகிறார்.

அவரின் கருத்துகள் குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கும் பிற மதத்தினருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகைவகையில் உள்ளது. மேலும், ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும் அவர் கருத்துக்களை முன்வைத்து வருகிறார். 

எனவே சுப்ரமணிய சுவாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், சுப்ரமணிய சுவாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை இடை நீக்கம் செய்ய வேண்டும்." என்று  இவ்வாறு வசீகரன் குறிப்பிட்டுள்ளார்.