பழுதடைந்த சாலைகள்....! ஆங்காங்கே பெயர்ந்து நிற்கும் கம்பிகள்..! விபத்து நிகழும் அபாயத்தில் பெரியார் பேருந்து நிலையம்..!

பழுதடைந்த சாலைகள்....! ஆங்காங்கே பெயர்ந்து நிற்கும் கம்பிகள்..!  விபத்து நிகழும் அபாயத்தில்  பெரியார் பேருந்து நிலையம்..!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.  இந்த நிலையில், பயணிகளுக்குப் பாதுகாப்பற்ற பேருந்து நிலையமாக மாறும் மதுரை பெரியார் ஸ்மார் சிட்டி பேருந்து நிலையம் சாலை பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டியிருப்பதால் விபத்து அபாயம் இருப்பதாக மக்கள் கவலை கொள்கின்றனர்.   

மதுரை பெரியார் பேருந்து நிலையமானது,  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத்  திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறிருக்க,  தினசரி 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்  இயக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் இதன்மூலம் பயன்பெற்று வருகின்றனர். 
 
இந்நிலையில், பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் மற்றும் தார் சாலைகளில் பல்வேறு இடங்களில் பெயர்ந்து பழுதான நிலையில் காணப்படுகிறது. அதோடு சில இடங்களில் கட்டுக் கம்பிகள் வெளியில் நீட்டி இருப்பதால், விபத்து அபாயமும் உள்ளது. 

இதையும் படிக்க } விரைவில் தொண்டமாந்துறை கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்...அமைச்சர் துரைமுருகன் பதில்!

இதனையடுத்து, விபத்து நிகழாமல் இருக்க முறையே  ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தை பராமரித்து சீரமைக்க வேண்டும் என தினசரி அந்த பேருந்து நிலையத்தைப்  பயன்படுத்தும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க } கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை அரசே நியமிக்கும் - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்.