கடத்தல்காரர்களாக மாறிய போலீஸ்... பாலாஜி சிலையை மீட்டு அதிரடி...

தொடர்ந்து பல பழைய சிலைகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோபிசெட்டிபாளையத்தில் பாலாஜி சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

கடத்தல்காரர்களாக மாறிய போலீஸ்... பாலாஜி சிலையை மீட்டு அதிரடி...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பாலாஜி சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவி போலீசார் 2022ம் ஆண்டு, கடந்த நவம்பர் 7ம் தேதி அன்று கைப்பற்றினர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் முத்ற்கட்ட விசாரணையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் பாலாகி சிலை, கோவிலின் பூஜாரியால் திருடப்பட்டதும், கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | 12ம் நூற்றாண்டு சோழ தேசத்து பழமையான சிலைகள் கண்டுபிடிப்பு...

மத்திய மண்டல ஏ.டி.எஸ்.பி பாலமுருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குற்றப்பிரிவு குழுவினர், 600 ஆண்டு பழமையான பாலாஜி சிலையை கைப்பற்றிய சோதனையில் ஈடுபட்டனர்.

சிலை கடத்தல்காரர்களாக வேடமிட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஸ்டிங் ஆபரேஷன் செய்துள்ளனர். 600 ஆண்டு பழமையான இந்த பாலாஜி சிலையை 33 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறார் அந்த சிலை திருடன். இதனை வைத்து திருடர்களை கூண்டோடு சிறை பிடித்தனர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்.

மேலும் படிக்க | உயர் மதிப்புள்ள பழங்கால சிலைகள் பதுக்கல்...! சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல்...!

மத்திய மண்டல ஏடிஎஸ்பி பாலமுருகன், மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். அந்த குழுவில் எஸ்ஐ பாண்டியராஜன், எஸ்ஐ ராஜேஷ், எஸ்எஸ்ஐ நாகேந்திரன், ஹெட் கான்ஸ்டெபிள் பரமசிவம், சிவபாலன், மகாராஜன், ராஜேஷ் ஆகியோர் இருந்தனர்.

கலிங்கியம் கிராம நிர்வாக அலுவலர் திரு கே. வேலுமணி, கிராம உஹையாளர் கௌசல்யா ஆகியோர் முன்னிலையில் சோதனை நடைபெற்றது. சிலை திருடப்பட்ட வழக்கை விசாரிக்க, IWCID Cr No 52/2022-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சிலை, கும்பகோணம் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

மேலும் படிக்க | திருட்டு சிலைகளை நன்கொடையாக கொடுத்த நபர்...! இரு பழங்கால சிலைகள் கண்டுபிடிப்பு..!

கைப்பற்றப்பட்ட சிலை பழமையானதா? இல்லையா? என்பதை அறிய விசாரணையின் போது டி.எஸ்.ஐ முன் ஆஜர்படுத்தப்படும். கைப்பற்றப்பட்ட சிலை, 22.8 கிலோ எடையும் 58 செ.மீ உயரமும், 31 செ.மீ அகலமும் கொண்டது. டிஜிபி மற்றும் HOPF சைலேந்திர பாபு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரின் சிறந்த பணிக்காக அவர்களைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சோழர் காலத்து 7 சிலைகளும், 2 ஓவியங்களும் பறிமுதல்!