பாமகவினர் சிறை மாற்றம்: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்...!

பாமகவினர் சிறை மாற்றம்:  தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்...!

நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பாமகவினர் 20 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை  நேரில் சந்தித்த பின்பு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது மண்ணுக்காக, உரிமைகளுக்காக போராடியவர்களை கைது செய்து அலைகழிப்பதா என காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார்.

இரவோடு இரவாக கடலூர் சிலையில் இருந்து நெல்லை மதுரைக்கு  அழைத்து வர காரணம் என்ன என்றும் அவர்கள் என்ன தீவிரவாதிகளா?  எனவும் அன்புமணி வினவினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக உள்ளது என்றும் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாமக இல்லை எனவும் அவர் திட்ட வட்டமாக கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்:- 

” எங்கள் கட்சியை சார்ந்த 55 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் அவர்கள் மீது மிகக் கொடூரமான மோசமான வழக்குகளை பதிந்துள்ளனர். மண்ணுக்கும் மக்களுக்காக விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக போராடிய எங்கள் கட்சித் தொண்டர்கள் மீது மோசமான பிரிவுகள் வழக்குகள் போட்டுள்ளனர்.

அவர்களை கைது செய்து மதுரை மற்றும் பாளையங்கோட்டை சிறைச்சாலைகளில் வைத்துள்ளனர்.  இவர்கள் தீவிரவாதிகளா ? கஞ்சா விற்றார்களா ? ஏதேனும் மோசடி செய்து உள்ளார்களா ? மண்ணுக்கு போராடியவர்கள் மீது வழக்கு பதிவது என்பது தவறு.  கடலூரில் வைத்திருந்தவர்களை உடனடியாக மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றுவது என்பது தவறான நோக்கம்.  இதை விட்டு விட வேண்டும்.   கைது செய்த தொண்டர்களை  உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.  

தமிழக அரசு விவசாயிகளின் நண்பன் தோழர்கள் என்று பேசிக் கொண்டிருப்பது உண்மை என்றால் விவசாயத்தின் மீது உண்மையில் அக்கறை இருந்தால் இனிமேல் விவசாயத்தின் நிலங்களை கையிடப்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். தமிழக அரசு  ஏற்கனவே பல ஏக்கர் நிலங்களை அழித்துவிட்டார்கள். அழித்து நிலக்கரியை எடுத்துள்ளனர். இன்னும் பல ஏக்கர் நிலங்களை அழிக்க துடித்துக் கொண்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மூன்று மாதத்திற்கு முன்பு சட்டமன்றத்தில் ஒரு வாக்குறுதி கொடுத்தார்., அதாவது,  இனி தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைய தமிழக அரசு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொல்லி இருந்தார்கள்.  தற்சமயம் அவர் கொடுத்த வாக்குறுதிக்கும் மத்திய அமைச்சர் கொடுத்துள்ள வாக்குறுதிக்கும் நேர் எதிராக உள்ளது. ”, என்று சாடியுள்ளார். 

இதையும் படிக்க   |  காவிரி நீர் வேண்டி, பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!