உஷாராக இருங்க.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பாம்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

உஷாராக இருங்க.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பாம்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை

இதுத்தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் 10ஆம் தேதி வரை கர்நாடக, ஆந்திரா, குமரி கடலோர பகுதிகள்,  மன்னார் வளைகுடா மற்றும் கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.